coronavirus vanakkam
உலகம்

உலகையே வணக்கம் சொல்ல வைத்த கொரானா

      மிழரின் பாரம்பரிய வரவேற்பு முறையான இரு கைகளை கூப்பி வணக்கம் என்று சொல்லுதலை இன்று உலகமே கண்டு வியந்து பின்பற்றி வருகிறார்கள்.

ஆம் தமிழர்களின் வரவேற்பு முறையான வணக்கம் சொல்லுதலை உலக தலைவர்கள் எல்லாம் பின்பற்றுவது மட்டுமல்லாமல் தனது நாட்டு மக்களுக்கும் பின் பற்றுமாறு கூறியுள்ளனர்.

 இதற்கெல்லாம் காரணம் உலகையே உலுக்கிய கொரானா வைரஸ் தான் .உலகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரானா வைரஸ் ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். 3000 திற்கும் அதிகமான மக்கள் உயிர் இழந்துள்ளனர். மேலும் உலக பொருளாதார நிலையை முற்றிலும் பாதித்துள்ளது.

 இந்த நிலையில் கொரானா வைரஸ் தொற்று மனிதர்களிடமிருந்து மனிதனுக்கு எளிதாக பரவுவதால் அவர்களை தொடுவதற்கு அசசப் பட்டு கொண்டும் . தன்னை தற்காத்துக் கொள்ளவும் தமிழர்களின் பாரம்பரிய முறையான வணக்கம் சொல்லுதலை இன்று உலக மக்கள் பின்பறறுகின்றனர் . 

ஏற்கனவே கொரானா வைரஸ் தாக்கத்தால் பல நாடுகளில் பள்ளி மற்றும் கல்லூரி கால வரையறையின்றி விடுமுறை விடுத்துள்ளது. அலுவலகம் மற்றும் வணிக வளாகங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவை நீக்கியுள்ளனர். 

அதுமடடுமல்லாமல் கடந்த சில நாட்கலுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அயர்லாந்து பிரதமரை சந்திக்கும் போது கைகுளுக்குவதர்க்கு பதில் வணக்கம் சொல்லி கொண்டனர். அதேபோன்று பிரிட்டிஷ் இளவர்சர் சார்லஸ் தனது முக்கிய சந்திப்பின் போது வணக்கம் சொல்லுதலை பின் பற்றி உள்ளார். 

குறிப்பு : கொரனா வைரஸ் தொற்று ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்துவது எளிது. அதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.