tamilnadu_again lockdown_details
செய்திகள் தமிழ்நாடு

தமிழகதில் முழு ஊரடங்கு எதற்க்கெல்லாம் அனுமதி ? தடை ?

தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் எவைகளுக்கு எல்லாம் அனுமதி எவைகளுக்கு எல்லாம் தடை என்ற
விவரங்கள்.

உள்நாட்டு பயணத்திற்க்கன இரயில் மற்றும் விமாண சேவைகளுக்கு அனுமதி . பயணச்சீட்டு உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து சுகதரத்துறை சார்பில் கண்காணிக்கப் படுவார்கள்.

சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் விற்ப்பனையாகும் மாளிகை கடை , பால் கடை , மீன் விற்க்கும் கடைகள் மற்றும் இறைட்சி கடைகள் மதியம் 12 மணி வரை திறப்பதற்க்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் 50 % பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

முலு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது .
தங்கும் விடுதிகள் மருத்துவம் மற்றும் வணிகம் சார்ந்த பணி ஆட்க்கல் தங்குவதர்க்காக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஏழை எழிய மக்களின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
ஏற்கனவே அறிவித்தபடி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள்,
பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.