Tamil_Nadu_Chief_Minister_mk_Stalin
செய்திகள் தமிழ்நாடு

முதலமைச்சராக பதவி ஏர்க்க உள்ளார் மு.க.ஸ்டாலின் . மே 7 பதவியேற்பு விழா.

நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து மொத்தம் 159 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

இதில் தி.மு.க 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை நிருபித்து உள்ளது.

தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி , ம.தி.மு.க ,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , தமிழக வாழ்வுரிமை கட்சிகளை சேர்ந்த 8 எம்.எல்.ஏ உட்பட தி.மு.க வுக்கு
133 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

இதனால் தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இதனால் ஸ்டாலின் முதலமைச்சராக முறைப்படி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கொட்டி உள்ளார்.

நேற்று மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவராக மு.க. ஸ்டாலினை கட்சி எம்.எல்.ஏக்கள் ஒரு மனதாக எற்றுக்கொண்டனர்.

Tamil_Nadu_Chief_Minister_Stalin

தி.மு.க. சட்டமன்ற தலைவராக (முதல்-அமைச்சராக) மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தில் 133 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.

133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சியமைக்க மு.க.ஸ்டாலின் உரிமை கோரிய நிலையில் கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.