உலகம் செய்திகள்

தாலிபான்கலை கோபபடுத்திய அமெரிக்கா

காபூலை விட்டு போகும்போது, ஏர்போர்ட்டை நாசம் செய்துவிட்டு போய்விட்டார்கள், 73 விமானங்களை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு அழித்து விட்டு போய்விட்டார்கள் என்று தலிபான்கள் அமெரிக்கா மீது குற்றம்சாட்டி புலம்பி உள்ளது.

கடந்த 20 வருடங்களாக அமெரிக்கா எடுத்து கொண்ட அத்தனை முயற்சிகளும் தாலிபான்களிடம் தோற்று போய்விட்டது..

தாலிபான்களை முழுமையாக ஒழிக்க முடியாமல் தடுமாறவும் செய்தது… இறுதியில் ஆப்கனை விட்டு வெளியேற அமெரிக்க அரசு முடிவு செய்தது.

அதற்கேற்றபடி, அமெரிக்க படையினர் நாட்டை விட்டு வெளியேற தாலிபன்கள் கெடு வைத்தனர்.. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வெளியேறுமாறு சொன்னார்கள், ஆனால், ஒரு நாள் முன்னதாகவே அமெரிக்க படைகள் ஆப்கனை விட்டு வெளியேறிவிட்டன

எல்லாரும் சென்றபிறகு, தாலிபான்கள் முழு சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.. ஆட்சி அமைப்பது குறித்த பிஸியில் தாலிபான்கள் ஈடுபட்டும் வருகின்றனர்.

இப்படிப்பட்ட சமயத்தில்தான் ஒரு அதிர்ச்சி சம்பவம் தாலிபான்களுக்கு தெரியவந்துள்ளது.. காபூல் ஏர்போர்ட்டில் இருந்துதான் அமெரிக்க படையினரின் கடைசி ராணுவ விமானம் வெளியேறியது.. அப்போது, அந்த விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் அமெரிக்க வீரர்கள் நாசம் செய்துவிட்டார்களாம்

ஆப்கனில் இருந்து வெளியேறுவதற்கு கெடு விதிக்கப்பட்டுவிடவும், தங்களின் தளவாடங்களை முழுமையாக அமெரிக்க படையினர் எடுத்து செல்வதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்பதாலும், தங்கள் நாட்டு ராணுவ தளவாடங்கள் தாலிபான்களுக்கு எக்காரணம் கொண்டும் கிடைத்து விடக்கூடாது என்பதாலும், சினூக் ஹெலிகாப்டர்களையும், ஹம்வீக் ஏவுகணைகளையும் செயலிழக்க செய்துவிட்டனராம் அமெரிக்க படையினர்.

இதை பார்த்துதான் தாலிபான்கள் கொந்தளித்து போயுள்ளனர்.. அந்த விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் தாங்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தாலிபான்கள் கணக்கு போட்டிருந்தார்கள் போலும்.. ஆனால் மொத்த கணக்கையும் அமெரிக்க வீரர்கள் நொறுக்கிவிட்டனர்.. அந்த விமானங்களை பயன்படுத்த முடியாத அளவுக்கு செயலிழக்க செய்துவிட்டு சென்றுள்ளார்கள் அமெரிக்க வீரர்கள்

ஏர்போட்டையும் நாசம் செய்துவிட்டார்களாம். இதனால் கடுப்பாகிவிட்டனர் தாலிபான்கள்.
இதை பற்றி அமெரிக்க ஜெனரல் கென்னத் மெக்கன்சி சொல்லும்போது, “காபூல் ஏர்போர்ட்டில் இருக்கும் 73 ராணுவ விமானங்களை அமெரிக்க படையினர் செயலிழக்க செய்துவிட்டனர்.. அதை இனிமேல் பயன்படுத்தவும் முடியாது.

அந்த விமானங்களை பறக்க வைக்கவும் முடியாது.. இப்படித்தான் 27 ஹம்வீ வாகனங்களையும், 74 எம்ஆர்ஏபி கவச வாகனங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு செயலிழக்க செய்துவிட்டனர்..
அதேபோல சி-ராம்ஸ் (C-RAMS) என்ற ராக்கெட் எதிர்ப்பு அமைப்பையும் செயலிழக்க வைத்துவிட்டனர்.. வெளியேறுவதற்கு கடைசி நிமிஷத்தில் இதை செய்திருக்கிறார்கள்” என்று புலம்பி கொண்டே சொல்கிறார்.

அமெரிக்காவின் இந்த ராஜதந்திரத்தை கண்டு தாலிபான்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளார்கள். இது முதல் தடவை இல்லை.

ஏனென்றால், அப்படியே அந்த சாப்பரை விட்டு விட்டு போனால், அதன் டெக்னாலஜியை பாகிஸ்தான் ராணுவம் எளிதாக கண்டறிந்துவிடும்.. அதனாலேயே அழித்து விட்டுபோனார்கள்.. இப்போதும், அப்படி ஒரு ராஜதந்திரத்தைதான் அமெரிக்கர்கள் கையாண்டுள்ளார்கள்.. இதனால் அப்படியே அதிர்ந்து போய் உள்ளார்களாம் தாலிபான்கள்..!