mk stalin chief minister
செய்திகள் தமிழ்நாடு

சவால்களை கடந்த சாதனை நாயகன். கனவை நினைவாக்கிய மு.க.ஸ்டாலின் .

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 126 இடங்களில் திமுக அமோக வெற்றி . தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்.


நடந்து முடிந்த தமிழக சட்ட மன்ற தேர்தலில் திமுக தனி பெரும்பான்மைஉடன் 126 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மொத்தம் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து
158 இடங்களில் திமுக வெற்றி பெற்று உள்ளது .


கடந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று 03.05.2021 நடைபெற்றது .


இதுவரை எந்த சட்ட மன்ற தேர்தலிலும் இல்லாத அளவிற்க்கு 5 முனைப்போட்டி நிலவியது .
தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும் ,
அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும் ,
அ.ம.மு.க. – தே.மு.தி.க. தலைமையில் ஒரு கூட்டணியும் ,
மக்கள் நீதி மய்யம் – சமத்துவ மக்கள் கட்சி சேர்ந்து ஒரு கூட்டணியும்
நாம் தமிழர் கட்சி தனித்து நின்றும் போட்டிடிட்டது.


பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்றது .


இதில் திமுக மட்டும் 126 தொகுதிகளில் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்று உள்ளது .
இதனால் திமுக தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் . திமுக வின் இந்த வெற்றியை தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர் .