செய்திகள் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கொரானா வைரஸ்

தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை  காரணமாக பல வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

தனியார் மற்றும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு வலியுறுத்தி உள்ளது. பல ஐடி நிறுவனங்கள் 2 வாரங்கள் விடுமுறை விடுத்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பேருந்துகளில் இரசாயன பூச்சி மருந்துகளையும் தெளித்து போர்க்கால அடிப்படையில் தங்களது முன்னெச்சரிக்கை பணியை செய்து வருகின்றனர். 

அனைத்து திரைப்பட படபிடிப்புகளும் ரத்து செய்து உள்ளனர். ஏற்கனவே வெளிநாட்டில் நடைபெற்ற கோப்ரா மற்றும் பல படபிடிப்பும் ரத்து செய்து தமிழ் நாடு திரும்பி உள்ளனர். 

கொரானா வைரஸ் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கண்டு மக்கள் பயந்து ஓடும் விநோத நிகழ்வும் நடைபெறுகிறது. திருச்சியில் கொரானா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 நபர்கள் தப்பி ஓட்டமும் பிடித்துள்ளனர்.

கொரானா வைரஸ் காரணமாக பொருளாதார மந்த நிலை தொடர்ந்து நீடித்த நிலையில். பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது. 

சிக்கன் விலையை கடுமையாக பதித்த கொரானா வைரஸ் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் விலை குறைந்துள்ளது. 1 கிலோ சிக்கன் ₹200 வரை விற்ற வந்த நிலையில் கொரானா வைரஸ் காரணமாக 1 கிலோ ₹50 க்கு குறைந்துள்ளது. இதனால் மீன் மற்றும் அட்டு இறச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.