உலகம் செய்திகள்

கொரோனா வைரஸ் ஒழிப்பு உலக அளவில் அமெரிக்கா மீது சீன ஊடகம் குற்றச்சாட்டு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசியல் மிகப்பெரும் தடையாக உள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசியல் மிகப்பெரும் தடையாக உள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது. சீனாவைக் களங்கப்படுத்தும் விதமாகவும்,

அரசியல் அழுத்தம் கொடுக்கும் வகையிலும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டியது.

இந்நிலையில், கொரோனா வைரசை ஒழிக்கத் தடையாக இருப்பது அமெரிக்காவின் “அரசியல் எனும் வைரஸ்” என்று சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும், அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொண்டு கொரொனா பரவலை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் கை கோர்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.