செய்திகள் தமிழ்நாடு

Coronavirus Update : தமிழகத்தில் இன்று ஆகஸ்ட் 23 1604 நபர்களுக்கு புதிதாக கொரொனா தொற்று பாதிப்பு. 25 பேர் இறப்பு.

தமிழ்நாட்டில் இன்று 1,604 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,02,489 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,604 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,02,489 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 25 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 18,887ஆக உள்ளது. இன்றுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,734 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 18 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,734 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,863 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இத்துடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,48,868 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மொத்தமாக 1,53,068 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாம் அலை ஏற்படலாம் என்ற அச்சங்கள் இருந்தாலும், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவது நிம்மதியைத் தருகிறது.

கொரொனா தொற்று நிலவரம்:

கொரொனா தொற்று பாதிப்பு – 1,63004

கொரொனா தொற்று மரணங்கள் -25

கொரொனா தொற்று மொத்த பாதிப்பு – 26,02,489

கொரொனா தொற்று டிஸ்சார்ஜ் – 1,863

கொரொனா தொற்று சோதனைகள் – 1,53,068