செய்திகள் தமிழ்நாடு

கொரோனா அறிகுறி இருபவர்களுக்கு தமிழகம் வார தடை

முதியவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பாதிப்பு விகிதம் அங்கு அதிகரித்துள்ளது.

அதை கருத்தில் கொண்டு அந்த மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு தினமும் தொழில் நிமித்தமாக தமிழகத்தில் இருந்து பலர் சென்று வருகிறார்கள்.

அதன் காரணமாக எல்லையோர மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதியவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

மேலும் 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போடும் பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன.

இந்த பணிகளில் சுகாதாரத்துறையினருடன் உள்ளாட்சி நிர்வாகங்கள், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கேரளாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கேரளாவையொட்டி உள்ள தமிழக மாவட்டங்களின் எல்லைகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டுவருகிறது.

அதன்படி கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்கள் தமிழகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.

மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.