செய்திகள் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று 1,562 நபர்களுக்கு தொற்று உறுதி

தமிழ்நாட்டில் நேற்று 1,509 பேருக்கு கொரோனா தொற்று பாதித்த நிலையில், இன்று 1,562 என பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

1,60,523 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,562 ஆக உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 166 என பதிவாகி குறைந்துள்ளது. இன்று பதிவான புதிய தொற்றாளர்களில் கோவையை சேர்ந்தவர்கள் 215.

கோவைக்கு அடுத்தடுத்த நிலைகளில் சென்னை (166), ஈரோடு (132), தஞ்சை (110), செங்கல்பட்டு (103), திருப்பூர் (90) என்றும் பதிவாகியுள்ளது.

கொரோனா சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதில் அரசு மருத்துவமனையை சேர்ந்தவர்கள் 13 பேர்; தனியார் மருத்துவமனையை சேர்ந்தவர்கள் 7 பேர்.

இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,961 என உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,684 என்று பதிவாகியுள்ளது. இதன்மூலம் சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 16,478 என்றாகியுள்ளது.

மேலும் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 25,66,504 என்றாகியுள்ளது.