corona-patients-died-in-ambulance
செய்திகள் தமிழ்நாடு

சென்னை : ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 கொரொனா நோயாளிகள் ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிர் இறந்தனர்.

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரொனா சிகிச்சைக்காக காத்திருந்த 4 கொரொனா நோயாளிகள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமலும் , ஆக்ஸிஜன் கிடைக்காததாலும் ஆம்புலன்சில் இருந்தபடியே உயிர் இறந்து உள்ளனர்.

இந்த செய்தி தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்ப்படுத்தி உள்ளனர் .

இந்தியா முலுவதும் கொரொனா தொற்றின் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்ப்படுத்தி வருகிறது , இருப்பினும் தமிழகத்தில் கொரொனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து
அதிகமாகி வந்த நிலையில் உயிர் பலி எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்து வந்தது .

ஆனால் தற்போது நிலைமை தலைகீலாக மாறி தமிழ்நாடு முலுவதும் கொரொனா தொற்று காரணமாக உயிர் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது .

மருத்துவ மனைகளில் படுக்கை வசதி குறைபாடு , ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் தொடர்ந்து தமிழகத்தில் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .

சென்னையில் மட்டும் சராசரியாக ஒரு நாள் கொரொனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7000 நபர்களை கடந்து வருகிறது.

இதனால் தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகள் நிரம்பி வலிகின்றனர் . இதனால் சிகிச்சை கிடைக்காமல் உயிர் இறப்பவர்களில் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரொனா சிகிச்சைக்காக மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 293 நபர்கள் உயிர் பிரிந்து உள்ளனர் . இதில் 131 நபர்கள் தனியார் மருத்துவமணிகளில் உயிர் இறந்து உள்ளனர் , மேலும் 162 நபர்கள் அரசு மருத்துவ மனைகளில் உயிர் பிரிந்து உள்ளனர் .