உலகம் செய்திகள்

மனித உடல் பாகங்களுடன் வந்தடைந்த விமானம் – வெளியான வீடியோ

தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில், 20 வருட போர் நிறைவு பெற்றுள்ளதாகவும், மக்கள் மற்றும் ஆப்கானின் சொத்துக்கள் ஏதும் கொள்ளையடிக்கப்படாது எனவும் தாலிபான் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஆப்கானை மையமாக வைத்து பிற நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் அமைப்பை அல்லது பிற பயங்கரவாத அமைப்பை ஊக்குவிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தில் உலக நாடுகள் அமைதிகாத்துக்கொண்டு இருக்கிறது.

மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் இஸ்லாமிய பெண் அடிமைவாத சட்டத்தின் வரைமுறை இனி தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று அஞ்சுவதாலும், பயங்கரவாதிகள் எந்த நேரத்தில் என்ன முடிவெடுத்து அறிவிப்பார்கள் என்ற பயம் இருப்பதாலும் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புக முயற்சித்து வருகின்றனர்.

காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பிறநாட்டு இராணுவ மீட்பு விமானங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காபூலில் இருந்து அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் ஒன்று கத்தார் புறப்பட்டது.

அதில் 640 பேர்கள் பயணம் செய்தனர். மேலும், விமானம் புறப்பட்ட சமயத்தில் விமான சக்கர பகுதியில் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் சக்கர பகுதியில் அமர்ந்திருந்தவர்களில் சிலர் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.

இந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டு கத்தாரில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தின் சக்கர பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.