coronavirus india
இந்தியா

இந்தியாவில் கொரானா வைரஸ்

     சீனாவில் முதன் முதலில் பரவ துவங்கிய கொரானா வைரஸ் தற்பொழுது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது .
ஆம் உலகம் முழுதும் இதுவரை 90000 நபர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் 3200 கும் மேற்படட நபர்கள் இந்த கொரானா வைரஸ் ஆல் உயிர் இழந்துள்ளனர் . இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக தங்கம் மற்றும் பெட்ரோல் போன்றவை விலை சரிந்துள்ளது. 

பல நாடுகளில்  தொடர்சசியாக கொரானா வைரஸ் பரவிய இந்த நிலையில் . இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது .ஆனால் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி சீனா, ஈரான், இத்தாலி, தென்கொரிய போன்ற நாடுகளில் அதிக அளவில் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இதனால் உலக நாடுகள் இந்த நாடுகள் உடனான விமான சேவை , ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. 

இதனை தொட்ந்து இந்தியாவில் ஏற்கனவே கொரானா வைரஸ் பரவி அதனை கட்டுப்படுத்திய நிலையில் .தற்போது 03.03.2020 இருவருக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது .இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் டெல்லியில் ஒருவருக்கும் , தெலுங்கானாவில் ஒருவருக்கும் கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தனிமை படுத்தப்பட்ட வார்டில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள் .

 இந்தியாவில் கொரானா வைரஸ்

இந்த நிலையில் திடீரென்று தற்பொழுது 04.03.2020 மேலும் 25 நபர்களுக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  இது குறித்து மத்திய சுகாத்தாரத்துறை அமைச்சர் ஹார்ஸ் வர்தன் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூரியதாவது சமிபத்தில் இத்தாலி, ஈரான் சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு பயனம் செய்தவர்களில் இதுவரை 25 நபர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.


 இதன் விளைவாக பாரசிட்டமல் உட்பட 26 மருந்து பொருட்கள் , மற்றும் ஸ்மோக் மாஸ்க் போன்றவை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏறறுமதி செய்ய மத்திய அரச தற்காலிகமாகு தடை செய்துள்ளது. இதனால் பொது மக்கள் யாரும் கொரானா வைரஸ் தோற்று பற்றி அச்சம் கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

பல நாடுகளில் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்துதல் ,ஈரான் நாட்டில் 3000 கைதிகள் விடுதலை , போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது.