இந்தியா செய்திகள்

தொடர்ந்து குறைந்து வரும் கொரொனா தொற்று .

ஜஸ்ட் நாலே மாசம்தான்.. கதறி ஓடும் தொற்று.. இந்தியாவில் 125 நாட்களுக்கு பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30, 093 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது… இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு, குறைந்த கொரோனா பாதிப்பு இதுவாகும்..! சில மாதங்களுக்கு முன்புவரை இந்தியாவில் தொற்று பரவல் உச்சத்தில் இருந்தது.

அதிலும் 2வது அலை படுமோசமாக இருந்தது.. வயது வித்தியாசம் பாராமல் எல்லாரையும் தாக்கியது. இதனால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளை முழுமூச்சில் மேற்கொண்டது.. தற்போதும் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் 125 நாட்களுக்கு பிறகு கணிசமாக குறைவு- ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30.093 அதிரடியாக எல்லா மாநிலங்களும் லாக்டவுனை பிறப்பித்தன. பொதுபோக்குவரத்தை தடை செய்தன. கொரோனா நோய் தடுப்பு மையங்களை அமைத்து, நோயாளிகளை தனிமைப்படுத்தின.

கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணியை அதிகப்படுத்தின. இப்படி ஒவ்வொன்றாக செய்ததையடுத்து இந்த 4 மாதத்தில் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.. இப்போதுவரை 41,18,46,401 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் தினசரி கொரோனா பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல்களையும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இப்போது வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 125 நாட்களுக்குப் பிறகு குறைவான கொரோனா பாதிப்பு இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்து 093 பேர் கொரோனா பாதிப்புக்கு இந்தியாவில் ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த தொற்று பாதிப்பு 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 322 ஆக இருக்கிறது. கொரோனாவால் ஒரேநாளில் 374 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,14,482 ஆக உயர்ந்தள்ளது.. நேற்று ஒரே நாளில் 45,254 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றுள்ளனர்.. இப்போது மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 3 லட்சத்து 53 ஆயிரத்து 710 ஆக உயர்ந்துள்ளது.. இது 97.32 சதவீதமாகும். தற்போது, 4,06,130 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்” என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *