pinarayi_vijayan
இந்தியா செய்திகள்

கேரளா : மே 8 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்

இந்தியாவில் கொரொனா தொற்று இரண்டாம் அலையாக உருவெடுத்து அதிகமான எண்ணிக்கையில் உயிர் இழப்பை ஏற்ப்படுத்தி வருகிறது.

கொரொனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை செல்படுத்தி வருகிறது , இருப்பினும் அந்த நடவடிக்கைகள் பெரிதும்
பலனளிக்காத நிலையில் தற்போது இந்தியாவில் கொரொனா தொற்று மூன்றாவது அலையை எட்டத்தொடங்கி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.

இதனால் கொரொனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆரம்பநிலையில் கொரொனா தொற்றை கட்டுப்படுத்த கையாண்ட உக்தியை தற்போது
கையில் எடுத்து வருகிறது.

அதுவே முலு ஊரடங்கு.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போது முலு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது .
அந்த வரிசையில் தற்போது கேரளாவில் முலு ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது.

கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவிற்க்கே முன் உதாரணமாக இருந்த கேரளாவில் தற்போது தொடர்ந்து கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் , மீண்டும்
கொரொனா பரவலை தடுக்க கேரளா அரசின் முதலமைச்சராக உள்ள பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.

இதன்படி மே 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கேரளா முலுவதும் முலு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கேரளா முதல் அமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.