இந்தியா செய்திகள்

இந்தியாவில் இதுவரை 63 கோடி கொரொனா தடுப்பூசி போடப்பட்டுஉள்ளது ,

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 63 கோடியைக் கடந்தது
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 63 கோடியைத் தாண்டியது.

இது தொடர்பாக மத்திய குடும்பநல மற்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 73,85,866 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 63,09,17,927 பேருக்கும் மேலாக கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 45,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த பாதிப்பு 3,26,95,030 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவில் இருந்து 3,18,88,642 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தி்ல் 31,374 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,68,558 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 460 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,37,830 என்றளவில் உள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 63.09 கோடியாக உள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கரோனா தொற்று குறையாமல் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 31,265 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். 153 பேர் தொற்றுக்கு பலியாகினர்.