சினிமா செய்திகள்

Trending No 1 : ட்விட்டரில் வரலாறு படைத்த வலிமை

2021ம் ஆண்டின் முதல் பாதியில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேகுகளில் வலிமை முதலிடத்தை பிடித்திருக்கிறது. விஜய்யின் மாஸ்டர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

2021ம் ஆண்டின் முதல் பாதியில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேகாக வலிமை இருக்கிறது.

இந்த ஆண்டில் ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அதிகம் ட்வீட் செய்யப்பட்ட 10 ஹேஷ்டேகுகளின் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

அந்த பட்டியலில் வலிமை(#valimai) முதலாவது இடத்திலும், #ajithkumar 4வது இடத்திலும் இருக்கிறது. வலிமை முதலிடத்தை பிடித்ததில் ஆச்சரியமே இல்லை. அப்டேட் கேட்டே ஏகப்பட்ட ட்வீட்டுகள் போட்டார்கள்.

ட்விட்டர் பட்டியல் வெளியான பிறகு #AjithKumar என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. வலிமை, அஜித்தை தல ரசிகர்கள் கொண்டாடுவது தான் அந்த டிரெண்டிங்கிற்கு காரணம்.

ட்விட்டர் பட்டியலில் #master ஹேஷ்டேக் இரண்டாவது இடத்திலும், #thalapathy65 என்கிற ஹேஷ்டேக் 5வது இடத்திலும் இருக்கிறது.

ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேகை உருவாக்கி டிரெண்டாக்க விடுவதில் அஜித், விஜய் ரசிகர்கள் வல்லவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் இந்த சாதனை எல்லாம் பெரிது இல்லை.

ட்விட்டர் பட்டியலில் மகேஷ் பாபுவின் #sarkaruvaaripaata 3வது இடத்திலும், பவர் ஸ்டார் பவன் கல்யாணின் #vakeelsaab 10வது இடத்திலும் உள்ளது.

ட்விட்டர் டாப் 10 ஹேஷ்டேக் பட்டியலில் இருக்கும் ஒரே நடிகர் அஜித் தான் என்பது குறிப்பிடத்தக்கது. உலக மக்களை ஆட்டிப் படைக்கும் #covid19-க்கு 9வது இடம் தான் கிடைத்திருக்கிறது.