சினிமா செய்திகள்

தல – தளபதி ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீர் சந்திப்பு !

பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்யை தல தோனி திடீரென சந்தித்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். ​இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மலையாள படங்களில், நடித்து பிரபலமான நடிகர் மற்றும் துணை இயக்குனருமான ஷைன் டாம் சாக்கோ, பிரபல இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவிலும், இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையிலும் முடிவடைந்தது.

3வது கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடந்த எண்ணிய நேரத்தில் கொரோனா 2வது அலை உச்சத்தில் இருந்தது. எனவே படக்குழு தற்போது சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

தளபதி விஜய் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த சமயத்தில் தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தல தோனி அங்கு வந்துள்ளார்.

தோனி சென்னை வந்ததே விளம்பர படம் ஒன்றில் நடிப்பதற்காக தானாம். அந்த விளம்பர படத்தின் ஷூட்டிங்கும் விஜய்யின் பீஸ்ட் பட ஷூட்டிங் நடக்கும் கோகுலம் ஸ்டுடியோவில் நடக்க உள்ளது.

அதில் பங்கேற்க வந்த போது தான் விஜய் பட ஷூட் நடப்பதை கேள்விப்பட்ட தல தோனி அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.