சினிமா

விஜய் அஜித் ரசிகர்களின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

ளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் மாஸ்டர்.
விஜய் க்கு 64 வது திரைப்படம் மாஸ்டர் .  விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9 2020 அன்று வெளிவர உள்ள நிலையில் , இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது மார்ச் 16 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசுகையில் தனது திரை உலக பயணத்தில் 20 வருடங்களுக்கு முன் இருந்த அமைதியான ரெய்டு இல்லாத அந்த விஜய்யையே தான் விரும்புவதாகவும் கூறினார் .

அதுமட்டுமல்லாமல் வழக்கை நதியை போன்றது நம்மை வணங்குவதும் நம் மீது சிலர் கல் எரிவதும் இயல்பு என்றும் , இருப்பினும் நாம் அந்த நதியை போன்று தொடர்ந்து பயணித்து கொண்டு இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மாஸ்டர்  விஜய்

அதுமட்டுமல்லாமல் விஜய் நண்பர் அஜித் என்று ஒரு வார்த்தை கூறினார். இதற்கு விழா அரங்கமே அதிரும் அளவிற்கு கை தட்டல் மற்றும் கரகோசங்களும் எழுந்தது.

மாஸ்டர்  விஜய்

ஆம் நடிகர் விஜய் விழாவிற்கு கோட் அணிந்து வந்ததை பற்றி கேள்வி எழுப்புகையில் . நண்பர் அஜித் போன்று கோட் அணிந்து பார்க்களாம் என்று கூறினார்.

நண்பர் அஜித் என்று கூறி தனது ரசிகர்கள் இடையேயான சண்டைக்கு ஒரு முற்று்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஜய்.

அதுமடடுமல்லாமல் நண்பர் அஜித் என்ற வாசகம் சமூக வலைதளங்களில் டிரண்டிங்கும் ஆனது குறிப்பிடத்தக்கது.