சினிமா

இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 நபர்கள் உயிரிழப்பு.

      ந்தியன்: 1996 ஆம் ஆண்டு மே மாதம் இயக்குனர் சங்கர் தயாரிப்பில், A.R.ரகுமான் இசையில், உலகநாயகன் கமலாகாசன் நடிப்பில் வெளிவந்த Action படம் இந்தியன் .

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து , தற்போதும் இயக்குனர் சங்கர் தயாரிப்பில், உலகநாயகன் கமலாகாசன் நடிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் பரபரப்பாக நடந்து வரும் வேலையில் , 19.02.2020 அன்று இரவு சென்னை செம்பரம்பாக்கதில் உள்ள EVP Film City யில் படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் சாய்ந்து விலுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்துவிட்டனர் .

இதில் கிருஷ்ணா என்ற உதவி இயக்குனர் உட்பட படப்பிடிப்ப்ல் உதவியாளராக பணியாற்றிய மாது , சந்திரன் ஆகியோர் இழந்துவிட்டனர். 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் .

இதில் விபத்தை ஏற்படுத்திய ராட்சத கிரேன் 200 அடி உயரம் கொண்டது எனவும் , கிரேன் ஆபரேட்டரின் கவனக்குறைவு தான் விபத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது .

இந்த ராட்சத கிரேன் படப்பிடிப்பின் லைட்டிங் வேலைக்கு பயன்படுத்பட்தாகவும் கூறுகிறார்கள் .

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமலகாசன் தனது இரங்கலை தெரிவித்தார் , அதுமட்டுமல்லாமல் உயிரிழந்தவர்களின் குடும்பதிற்கு 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார் .

ட்விட்டரிலும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 படம் எனக்கு திரைஉலகின் கடைசி பயணம் என்று கமலகாசன் ஏற்க்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .

இந்தியன் படம் 1996 ஆம் ஆண்டு 15 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது அதாவது 2.1 மில்லியன் அமெரிக்க டாலர் குறிப்பிடத்தக்கது .