சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்லிம் ஆன குஷ்பு

நடிகை குஷ்பு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அவரது இளைத்த தோற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கும் அளவுக்கு வைரலானது.

பலரும் குஷ்புவா இது, என ஆச்சரியப்பட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் சமயத்தில் குண்டாக இருந்தவர் அடுத்த சில மாதங்களில் எப்படி உடலை இப்படி இளைக்க வைக்க முடியும் என்று சந்தேகப்பட்டார்கள்.

பலரும் பாராட்டுக்களைத் தெரிவிக்க சிலர் வழக்கம் போல அது போட்டோ ஷாப், போட்டோ எடிட் என்று பேச ஆரம்பித்தார்கள்.

அப்படி ஒரு ரசிகர், “இந்தக் காலத்தில் போட்டோ எடிட் மூலம் எதை வேண்டுமானாலும் செய்யலாம், அதற்கு இந்த போட்டோ உதாரணம்,” என்று டுவீட் போட்டிருந்தார்.

அவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், “சில முட்டாள்கள் எப்படி எதிர்மறை மற்றும் தாழ்வு மனப்பான்மையால் நிரப்பப்பட்டுள்ளார்கள் என்பதற்கு, நீங்கள் ஒரு சிறந்த உதாரணத்தை அமைத்துள்ளீர்கள். பரிதாபப்படுகிறேன்,” என்று பதிலளித்துள்ளார்.