சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் அனபெல் சேதுபதி’ திரைப்பட டிரைலர் வெளியீடு

நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் தாப்ஸி நடிக்கும் அனபெல் சேதுபதி திரைப்படத்தின் முதல் பார்வை கடந்த வியாழக்கிழமை வெளியானதைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டு இருக்கிறார்.

இயக்குநர் தீபக் சுந்தரராஜன் இயக்கத்தில் நாயகனாக விஜய்சேதுபதியும்  நாயகியாக  தாப்ஸியும்  நடித்துள்ள ‘அன்பெல் சேதுபதி’ திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஃபேன்டசி , ஹாரர்  பாணியில் உருவாக்கப்பட்ட இதன் முதல் பார்வை வெளியாகி ஆவலை ஏற்படுத்திய  நிலையில் இன்று (ஆக-25) இப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.

நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியீடு செய்திருக்கிறார்.  இப்படத்தில் நடிகர்கள் யோகிபாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

‘அனபெல் சேதுபதி’ டிஸ்னிப்ளஸ் ஒடிடி தளத்தில் வரும்  செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.