உலகம் செய்திகள்

காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு பாதரவைக்கும் வீடியோ காட்சி.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே வெடிச் சத்தம் கேட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அந்த நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர். சர்வதேச நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களைத் திரும்ப அழைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தின. ஆப்கன் மக்களும் கிடைக்கும் விமானங்கள் மூலம் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வந்தனர். இதனிடையே, கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வேறு சில […]

உலகம் செய்திகள்

ஆப்கனிலிருந்து 107 இந்தியர்கள் உட்பட 168 பேர் இந்தியா வந்தடைந்தனர்

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியை இந்தியா தீவிரபடுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று 107 இந்தியர்கள் உட்பட 168 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப் பட்டனர். அதை தொடர்ந்து ஆப்கனின் தோஹாவில் உள்ள 135 இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் செய்திகள்

அகதிகளை ஏற்க மறுக்கும் புதின் – எங்களுக்கு பயங்கரவாதிகள் தேவையில்லை , விரிவான தகவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வருபவர்களை விசா இல்லாமல் ஏற்க அவர்கள் (மேற்கத்திய நாடுகள்) மறுக்கும் நிலையில், நாங்களும் எங்கள் அண்டை நாடுகளும் விசா இல்லாமல் ஏற்க வேண்டுமா? என்று புதின் கேள்வி எழுப்பியுள்ளார். என்ற போர்வையில் வரும் பயங்கரவாதிகள் ரஷ்யாவுக்கு தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் உரிமைகள் கேள்விக்குறியாகியுள்ளது. 20 ஆண்டுகால வளர்ச்சியை தாலிபான்கள் பின்னோக்கி இட்டு செல்வார்கள் என […]

உலகம் செய்திகள்

மனித உடல் பாகங்களுடன் வந்தடைந்த விமானம் – வெளியான வீடியோ

தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில், 20 வருட போர் நிறைவு பெற்றுள்ளதாகவும், மக்கள் மற்றும் ஆப்கானின் சொத்துக்கள் ஏதும் கொள்ளையடிக்கப்படாது எனவும் தாலிபான் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, ஆப்கானை மையமாக வைத்து பிற நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் அமைப்பை அல்லது பிற பயங்கரவாத அமைப்பை ஊக்குவிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் உலக நாடுகள் அமைதிகாத்துக்கொண்டு இருக்கிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் இஸ்லாமிய பெண் அடிமைவாத சட்டத்தின் வரைமுறை இனி தீவிரமாக […]

உலகம் செய்திகள்

திருப்பி அடிக்க தயார் இந்தியாவில் பயிற்சி பெற்ற ஆப்கன் வீரர்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தாலிபான் பயங்கரவாத அமைப்பு தனது சர்வாதிகாரத்தை தொடங்கியுள்ளது. மாணவர் அமைப்பாக துவங்கிய தாலிபான் பின்னாட்களில் பிற்போக்கு கொள்கைகளின் அமைப்பாக மாறி ஆயுதங்களை கையில் எடுத்து சர்வதேச பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்தது. பல நாடுகள் மற்றும் தொழிலதிபர்களின் நிதி உதவி மூலமாக வளர்ந்த இந்த அமைப்பு, அமெரிக்கா பொம்மை அதிபரை பதவியில் அமர்த்தி, ஆப்கானிஸ்தானை தனது கைப்பாவையாக செயல்பட வைப்பதாக குற்றஞ்சாட்டி கடந்த 20 ஆண்டுகளாக வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டது. […]

உலகம் செய்திகள்

இந்துக்கள், சீக்கியர்களுக்கு முழு பாதுகாப்பு – தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள்-சீக்கியர்களை சந்தித்த தலிபான் தலைவர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கான் அரசை, ராணுவத்தை முறியடித்து அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைபற்றி உள்ளனர். வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா மட்டுமின்றி அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தான் நிலைமையை மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க ஆப்கானிஸ்தானில் உள்ள […]

உலகம் செய்திகள்

அதிர்ச்சி வீடியோக்கள் – காபுலில் இருந்து விமானத்தில் தொங்கியபடி பயணித்தவர்கள் 3 நபர்கள் கீழே விழுந்து பலி

விமானத்தில் பயணித்த மூவர் அருகே இருந்த வீடுகளின் மீது விழுந்ததை பார்த்ததாக சிலர் தெரிவித்திருக்கின்றனர். இந்த வீடியோ கடும் அதிர்ச்சியையும் காபுலில் நிலவும் அசாதாரண சூழலையும் உணர்த்துவதாகவும் உள்ளது. தலிபான்களிடம் இருந்து தப்பிப்பதற்காக விமானத்தில் தொங்கியபடி பயணம் செய்த மூன்று பேர் கீழே விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உள்நாட்டு போராட்டக் குழுவான தலிபான்களின் ஆக்ரோஷத்துக்கு ஈடு கொடுக்க முடியாத ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் கடந்த சில தினங்களாக பெரும் பின்னடைவை சந்தித்திருந்தன. காந்தகார் […]

உலகம் செய்திகள்

காபுல் நகரின் தற்போதைய நிலை சாட்டிலைட் புகைப்படங்கள்

விமான நிலைய வளாகத்திலும், விமான ஓடுபாதையிலும் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டிருந்தனர். இது திரைப்படங்களில் வரும் காட்சிகளையும் மிஞ்சுவதாக இருந்தது. தலிபான்களிடமிருந்து தப்பிப்பதற்காக காபுலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஒரு விமானத்தில் எப்படியாவது ஏறி தப்பித்து எங்காவது சென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் விமான நிலையத்தில் குவிந்ததும், விமானங்களில் முண்டியடித்துக் கொண்டு ஏறியதும், அங்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றதையும், ஓடு பாதையில் சென்ற விமானத்தின் கூடவே ஓடி ரயில்களில் ஏறுவது போல […]

உலகம் செய்திகள்

ஆப்கன் பெயரை மாற்ற தாலிபான்கள் முடிவு.

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்த நாட்டின் பெயரை மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 1996 முதல் 2001ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் இருந்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியோடு தாலிபான்கள் ஒடுக்கப்பட்டு, அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. ஆப்கானிஸ்தானில், இப்போது மீண்டும் தாலிபான்கள் எழுச்சி பெற்றுள்ள நிலையில் அமெரிக்கா எதிர்ப்பு காட்டாமல் ஏற்கனவே உறுதி அளித்தபடி தனது படைகளை படிப்படியாக வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் பல பகுதிகளை […]

உலகம் செய்திகள்

தலிபான்கள் ஆப்கன் அதிபர் மாளிகைக்குள் அணிவகுப்பு.

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள், போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளன. மேலும், அதிபர் மாளிகையின் உள்ளே நுழைந்த தலிபான்கள் அங்குள்ள மொத்த அறையை அதிசயமாக பார்த்து வியக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் பின்லேடனுக்கு, அப்போதைய ஆப்கன் ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. மனித உரிமைகளுக்கு எதிரான, மத […]