தக்காளி அழகு குறிப்புகள் ,Tomoto Beauty Tips
அழகு குறிப்புகள்

தக்காளி அழகு குறிப்புகள்

      தொடர்ந்து மிகவும் எளிமையான மற்றும் பக்க விளைவுகள் இல்லாத உடனடி தீர்வு தரக்கூடிய அழகு குறிப்புகள் மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற தகவல்களை இந்த தளத்தில் காணலாம்.

நாம் வீட்டில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி அழகு பயன்பாட்டிற்கு மிகவும் சிறந்தது. தக்காளியில் உள்ள அமிலம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சரும பிரச்சைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. 

முகப்பருக்களுக்கு முற்றுப்புள்ளி


    முகப்பருக்களுக்கு தக்காளி மிகவும் சிறந்த தீர்வாகும் . முகப்பரு மறைய தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு சுத்தமான குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிகொள்ளவெண்டும் . சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியை முகம் முழுவதும் தடவ வேண்டும். பிறகு 15 நிமிடம் கழித்து சுத்தமான குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

தினமும் இந்த முறையை பின்பற்றி வந்தால் 1 வாரத்தில் முகப்பரு மறைந்து முகம் பொலிவு பெறும்.

கருமை நிறம் மறைந்து முகம் வெண்மை நிறத்தில் மாற. 

   நன்கு சிவந்த பழுத்த தக்காளி ஒன்றை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும் . பிறகு சிறிதளவு தயிரை எடுத்து கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்றாக கூல் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை தினமும் 15 நிமிடம் முகத்தில் தடவி உலர விட வேண்டும்.
 இந்த முறையை பின்பற்றி வந்தால் 7 நாட்களில் பலன் கிடைக்கும். இந்த முறை வெயிலினால் ஏற்படும் கருமை நிறம் மற்றும் கண்ணில் தோன்றும் கருவளையம் போன்ற  பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வாக இருக்கும்.  என்பது குறிப்பிடத்தக்கது.

சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள் மறைய

  எலுமிசசம்பழம் மற்றும் தக்காளி ஆகியவற்றை பயன்படுத்தி சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை எளிதில் குணப்படுத்தலாம்.

1 தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு எலுமிசசம்பழத்தை பாதி அளவு நறுக்கி கொள்ள வேண்டும். தக்காளியை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து தினமும் 15 நிமிடம் சருமத்தில் தடவி உலர விட வேண்டும்.
பிறகு சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை பயன்படுத்தி வந்தால் 1 மாதத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
இயற்கையான மிருதுவான அழகை பெறுவீர்கள். முகத்தில் எண்ணெய் பசை அதிகம் வலிந்தாலும் இந்த முறையை பின்பற்றலாம்.