பொடுகு வராமல் இருக்க சில எளிய வழிமுறைகள்
அழகு குறிப்புகள்

பொடுகு வராமல் இருக்க சில எளிய வழிமுறைகள்

      பொடுகு வராமல் இருக்க. பொடுகு தொல்லையில் இருந்து விடுபட மிகவும் எளிமையான வழிமுைகளை இங்கு காணலாம். 

 1. மருதாணி இலையை போதுமான அளவு எடுத்து சுத்தமான நீரில் கழுவி கொள்ள வேண்டும். பிறகு கூல் போன்று அரைத்துக் கொள்ளவும். அரைத்த மருதாணி இலையை தலை முடி முழுவதும் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். தலை முடி உலர்ந்த

பொடுகு வராமல் இருக்க சில எளிய வழிமுறைகள்

பிறகு தலை முடியில் தேங்காய் எண்ணெயை தடவி அதாவது முடியின் வேர் வரை செல்லும் படி தடவ வேண்டும்.  இந்த முறையை பின்பற்றி வந்தால் 1 வாரத்தில் பொடுகு மற்றும் பேண் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

2. சோற்றுககற்றாழை ஒன்றை எடுத்து உள்ளங்கை அளவுக்கு நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு அதனை தோல் நீக்கி விட்டு கூல் போன்று அரைத்துக் கொள்ளவும். அதனை அப்படியே தலை முடி முழுவது தடவ வேண்டும். நன்கு மாஸ்க் போன்று தடவிய பிறகு , 15 நிமிடம் கழித்து சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு தலை முடியை உலர விட வேண்டும். இந்த முறையை பயன்படுத்தி வந்தால் 5 முதல் 10 நாட்களில் பலன் கிடைக்கும்.

3. எலுமிசசம்பழம் ஒன்றை எடுத்து குறுக்கே பாதியாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு 1 லிட்டர் தண்ணீரில் நறுக்கிய எலுமிச்சை பழத்தில் சாரை தண்ணீரில் கலந்து முடியை அலசவெண்டும் . பிறகு சீகக்காய்  அல்லது சாம்பு கொண்டு தலை முடியை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் 7 நாட்களில் பலன் கிடைக்கும்.

4. வேப்பிலை போதுமான அளவு எடுத்து சுத்தமான நீரில் கழுவி கொள்ள வேண்டும். பிறகு கூல் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும் . அதனை அப்படியே தலை முடி முழுவதும் தடவ வேண்டும். பிறகு 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை பின்பற்றி வந்தால் 1 வாரத்தில் பொடுகு மற்றும் பேன் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபடலாம். 

5. செம்பருத்தி இலை போதுமான அளவு எடுத்து அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் எதையும்சேர்க்காமல் அப்படியே தலை முடி முழுவதும் தடவ 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு சுத்தமான குளிர்ந்த நீரில் தலை முடியை கழுவ வேண்டும். இந்த முறையை பயன்படுத்தி வந்தால் 10 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்.