முகத்தில் உள்ள மரு உதிர - அழகு குறிப்புகள். Tamil Beauty Tips Maru Vuthira.
அழகு குறிப்புகள்

முகத்தில் உள்ள மரு உதிர எளிமையான அழகு குறிப்புகள்

முகத்தில் உள்ள மரு மறைய எளிய வழிகள் உங்களின் முக அழகை கெடுக்கும். முகத்தில் திடீர் என்றோ அல்லது இயற்கையாகவோ உள்ள கரு நிற மருக்களை போக்க சில எளிய வழிமுறைகள்

வழிமுறை 1

    வெங்காயம், பூண்டு, இஞ்சி போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக்கி , பிறகு ஒன்றாக சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு செய்த இந்த கலவையை இரவு தூங்கும்போது கருமை நிற மருக்களின் மீது வைத்துவிட்டு படுக்க வேண்டும். பிறகு காலையில் எழுந்து சுத்தமான நீரில் கழுவவேண்டும் இவ்வாறு தினமும் செய்து வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்

வழிமுறை 2

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் விளக்கெண்ணெய் 1/2 டீ ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் 1 டீ ஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவை எடுத்து குலைத்து கொள்ள வேண்டும் . பிறகு இந்த கலவையை நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை கருமை நிற மருக்களின் மீது தடவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் 15 நாட்கள் முதல் ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்

வழிமுறை 3

    நன்கு பழுத்த நல்ல வாசம் வரக்கூடிய ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை இரண்டு துண்டுகளாக நறுக்கி கருமை நிற மருக்களின் மீதும் , அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் 1 மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பு: கருமை நிற மரு உள்ள இடத்தை சுத்தமான நீரில் நன்கு கழுவிய பிறகு பயன்படுத்தவேண்டும்.

நம் உடல் நல குறைபாடே இது போன்ற கருமை நிற மரு வெளிப்பாடுகள் மற்றும் அறிகுறிகள். இயற்கையான மற்றும் நல்ல உணவு முறைகளை பின்பற்றினால் இது போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம் அல்லது சரிசெய்யலாம்.