இளநரையை தடுக்க வழிகள் - Ila Narai Poga . Tamil beauty Tips .
அழகு குறிப்புகள்

இளநரையை போக்க சில எளிய வழிமுறைகள்

      ளநரை என்பது இளம் வயதில் முடி நரைத்து நம் நம் இளமை தோற்றத்தை மறைத்து முதுமையான தோற்றத்தை கொடுப்பது.
சில சமயங்களில் இது நமக்கு பெரிய அளவில் தொந்தரவாக இருக்கும். சில சமயம் இதனால் மன அழுத்தம் கூட ஏற்படுகின்றது. 

இந்த இளநரையை தடுக்கும் சில எளிய வழிமுறைகள் இங்கு காணலாம்.

இளநரை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணம் விட்டமின் குறைபாடு. மற்றும் இரும்பு சத்து குறைபாடு ஆகும்.

நெல்லிக்காய் மற்றும் வெந்தயம்

   நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் நெல்லிக்காய் பொடி மற்றும் வெந்தயம் சேர்த்து எளிதில் குணப்படுத்தலாம் . சிறிதளவு நெல்லிக்காய் பொடியை எடுத்துக்கொள்ள வேண்டும் . பிறகு தேவைக்கேற்ப வேந்தயத்தை எடுத்து சுத்தமான நீரில் கழுவி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து நெல்லிக்காய் மற்றும் அரைத்த வெந்தயத்தை ஒரு கலவையாக நன்கு பிசைந்து கொள்ளவும்.இதனை தினமும் முடியில் தடவி அதாவது முடியின் வேர்வரை செல்லும் படி 10 நிமிடங்கள் மஜாஜ் செய்து 20 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும்.

பிறகு குளிர்ந்த நீரில் முடியை அலசி  உலர வைக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றி வந்தால் 1 மாதம் முதல் 2 மாததிற்குள் நல்ல பலன் கிடைக்கும்.

கருவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்

   100 ml தேங்காய் எண்ணெயை எடுதுக்கொள்ளவேண்டும். பிறகு.10 முதல் 20 கருவேபபிலையை எடுத்து சுத்தமான நீரில் கழுவி எடுத்துக்கொள்ளவேண்டும்.
கழுவிய கருவேபபிலையை எண்ணெய் சட்டியில் இட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு வதக்கிய கருவேப்பில்லையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமாக சூடு செய்ய வேண்டும். சிறிது நேரத்தில் தேங்காய் எண்ணெயின் நிறம் மாறிய பின்னர் , சூடு குறையும் வரை உலர வைக்க வேண்டும். பிறகு ஒரு பாடிலில் உற்றி  தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் முடியின் வேர்ப்பகுதி வரை இட்டு . 10 நிமிடம் வரை மாஜாஜ் செய்ய வேண்டும்.

இந்த முறையை தினமும் பயன்படுத்தி வந்தால் 45 நட்களில் நல்ல பலன் கிடைக்கும்.

மருதாணி மற்றும் கருவேபபிலை

   தேவையான அளவு மருதானியின் இழையை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
அதேபோன்று கருவேபபிலையை மறுதானியின் பாதியளவு எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.  பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து குழைத்துக் கொள்ளவும் . பிறகு முடியின் வேர் வரை செல்லும் படி தேய்துக்கொள்ளவேண்டும்